Font Help?

Miyerkules, Oktubre 04, 2006

18. மரணம் ஒரு முடிவல்ல

சென்ற முறை இந்தியா சென்ற சமயத்தில் தஞ்சையில் உள்ள ஒரு புத்தகக் கடையில் உலாத்திக் கொண்டிருந்த போது அப்துல் ரகுமானின் "மரணம் ஒரு முடிவல்ல" எதேச்சையாக கண்ணில் பட்டது. கட்டுரை புத்தகம் போல தெரிந்ததால் அசுவாரசியமாக புரட்டினேன். ஆனால் கொஞ்சம் படித்த பின்புதான் இதன் தேவை தெரிந்தது.

ஏற்கனவே என் முந்தய பதிவில் அப்துல் ரகுமானின் புத்தகங்களை பற்றி சொல்லும் போது அவரது "பால்வீதி" பற்றியும் சொல்லியிருந்தேன். அப்போது படித்தபோது பால்வீதியின் கவிதைகள் சுத்தமாக புரியவில்லை. ஏதோ பெரிதாக உள்ளே பொதிந்து கிடக்கிறது என்று மட்டும் தெரிந்தது ஆனாலும் வெகு இறுக்கமாக கட்டப்பட்ட கவிதையில், வரிகளுக்கிடையே மட்டுமல்ல வார்த்தைகளுக்கிடையே படித்தாலும் அவ்வளவாக புரியவில்லை. இதை ரகுமானே ஒப்புக்கொண்டதோடு கவிதையின் பொருள் விளங்கிக்கொள்ள மூடியுள்ள திரையின் கயிறுகளை நம் கையில் தருகிறார். "மரணம் ஒரு முடிவல்ல" புத்தகம் பால்வீதியின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து போடுகிறது. முழுக்க சார்லியஸத்தின் அல்லது இருண்மையில் கட்டப்பட்ட பால்வீதியை கொஞ்சமேனும் வெளிச்சத்தில் படிக்க இது பெரிதும் தேவைப்படுகிறது. கிட்டதட்ட Spoon Feeding போலத்தான் என்றாலும் என்னைப் போல உள்ளவர்களுக்கு இது மிகவும் தேவை என்று நினைக்கிறேன்.

இதிலிருந்து ஒருதுளிமட்டும் இங்கே

என்னிலிருந்து கிழிக்கப்பட்ட
ஒரு தேதித்தாள்
இங்கே... சுவரில்...
சிலுவை அறையப்பட்டிருக்கிறது.

கிரண நூலிழை பின்னிய
இந்தக் கைக்குட்டை
விடைபெற்ற ஒரு நேரத்தின்
ஞாபகச் சின்னம்.


இது முன்னரே கொஞ்சம் புரிந்தாலும் கீழுள்ள விளக்கம் பார்த்தபின் படிக்கையில் முழுபரிணாமம் தெரிகிறது.

சுவரில் என் புகைப்படம் தொங்குகிறது. இது நானா. இல்லை இது வேறு நான். பழைய நான். இறந்த காலத்தின் ஏதொ ஓரு கணத்து நான். ஆம் இறந்து விட்ட நான். கணத்திற்கு கணம் நான் மாறிக்கொண்டிருக்கிறேன். புதிதாகிக் கொண்டிருக்கிறேன். உடலால், உள்ளத்தால். தினந்தோறும்
நான் கிழிக்கப்படுகிறேன். ஒவ்வொரு தேதித்தாளாக. இதோ! இது என்றோ என்னிலிருந்து கிழிக்கப்பட்ட ஒரு தேதித் தாள். இங்கே சுவரில் சிலுவை அறையப்பட்டிருக்கிறது.

அந்த புகைப்பட நேரம் நினைவு வருகிறது. அந்த நேரத்திற்குத்தான் என்மீது எவ்வளவு காதல், என்னிடமிருந்து விடைபெற்று செல்லும்போது அதை நான் மறந்து விடாமலிருக்க ஞாபகசின்னமாய், இந்த அழகிய கைக்குட்டையைத் தந்துவிட்டு சென்றிருக்கிறது. கிரணங்களால் என்னையே எம்ப்ராய்டரி செய்த கைக்குட்டை.


அப்துல் ரகுமானின் எண்ணவோட்டஙகள் எப்போதுமே என்னை பிரமிக்க வைக்கும். இந்தபுத்தகமும் அதை பிசிறில்லாமல் செய்திருக்கிறது. தனிமனிதராக அவர்பற்றிய பிம்பம் எதுமில்லை. எனவே தேவைக்கு அதிகமாக அவர் கலைஞரை புகழ்வது பிடிக்காதாயினும் இன்னும் என்னுளிருக்கும் பலூன் உடையவில்லை.

14 Comments:

Blogger ENNAR said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்

Miy Okt 04, 10:15:00 PM GMT-4  
Blogger Muthu said...

வாங்க என்னார் ஐயா,
ஆகா ரெண்டு நாள் நட்சத்திர பதிவு போடலைன்னதும் எல்லாரும் மறந்துட்டாங்களோன்னு நினைத்தேன். :-)
வருகைக்கு நன்றி.

Miy Okt 04, 10:50:00 PM GMT-4  
Blogger Sivabalan said...

நல்ல பதிவு.

நன்றி

Miy Okt 04, 11:00:00 PM GMT-4  
Blogger Muthu said...

சிவபாலன்,
வருகைக்கு நன்றி.

Miy Okt 04, 11:37:00 PM GMT-4  
Blogger மலைநாடான் said...

சோழநாடன்!

அழகான, அருமையான, பதிவு. நன்றி

Huw Okt 05, 12:12:00 AM GMT-4  
Blogger வெற்றி said...

சோழநாடான்,
நீங்கள் பதிவிலிட்ட அப்துல்ரகுமானின் கவிதை துப்பரவாகப் புரியவில்லை. நல்லவேளை, கீழே விளக்கத்தைக் கொடுத்துள்ளதால் புரிந்து கொண்டேன்.
நல்ல பதிவு.

Huw Okt 05, 01:11:00 AM GMT-4  
Blogger Chandravathanaa said...

இரத்தினச்சுருக்கம் போல சொற்பமாக எழுதியிருந்தாலும் அந்தப் புத்தகத்தின் மீது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். கிடைத்தால் கண்டிப்பாகப் படித்துப் பார்க்க வேண்டும்.

Huw Okt 05, 05:53:00 AM GMT-4  
Blogger Muthu said...

மலைநாடான்,
வருகைக்கு நன்றி.

வெற்றி,
பால்வீதி கவிதைகள் எல்லாமெ இப்படித்தான். அப்துல் ரகுமானே இந்த நூலில் சொல்லியிருக்கிறார், பெரும்பாலானவை பரிசோதனை கவிதைகள் அதனால் மிகை இருண்மை இருக்கும் என்று.

சந்திரவதனா,
கிடைத்தால் கண்டிப்பாக படியுங்கள். இது ஜூ.வி யில் தொடராக கூட வந்தது என்று நினைக்கிறேன். முடிந்தால் பின்பு சுட்டி தருகிறேன்.

வைசா,
நல்ல புத்தகம்தான். படிக்கும் போது பால்வீதியையுன் இதனையும் சேர்த்து படியுங்கள்.

Huw Okt 05, 01:48:00 PM GMT-4  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சோழநாடான்!
இந்த ஞானசூனியத்தை மன்னிக்க வேண்டும். கம்பனைக்கூட கஸ்டப்பட்டால் புரிந்து விடுவேன் போல் இருக்கு!!!
என்ன??,இவங்க கங்கணங்கட்டி.; எங்களுக்குப் புரியக் கூடாதெனதான் எழுதுகிறாங்களா?,,,
ஏதோ நீங்க விளக்கிவிட்டீங்க?,,,அதுகூட சிக்கலாகத் தான் இருக்கு!எனக்கு!!
என்ன?,,நான் தேறாத கேஸ் போல இருக்கா?,,விட்டுத் தள்ளுங்க!!!
நான் பாரதியுடனும்;கண்ணதாசனுடனும் என் சொச்சக் காலத்தை ஓட்டுகிறேன்.
யோகன் பாரிஸ்

Huw Okt 05, 03:02:00 PM GMT-4  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்லா எழுதி இருக்கீங்க கவிதை அதன் பொருள் எல்லாம் பிரமிக்க வைத்தது.

Biy Okt 06, 02:51:00 AM GMT-4  
Blogger Muthu said...

யோகன்,
உண்மையிலேயெ இவர் கவிதையெல்லாம் மிக நன்றாயிருக்கும்ங்க.இவரோட "பித்தன்", "ஆலாபனை" யெல்லாம் தெளிவாய் இருக்கும். அவை கிடைத்தால் படித்துபாருங்கள்.

Biy Okt 06, 04:48:00 AM GMT-4  
Blogger Muthu said...

குமரன் எண்ணம்,

வருகைக்கும், வாழ்த்துகளுக்கு நன்றி.

Biy Okt 06, 04:51:00 AM GMT-4  
Blogger Muthu said...

சோழா,

விளக்கத்திற்கு பிறகுதான் புரிகிறது.அருமையாக கவிஞர்.

கவியரங்கத்தில் கலைஞரை பாராட்டுபவர் என்று மட்டுமே நினைத்திருந்த என்னை இவரை பற்றி மீள் வாசிப்பு செய்யவேண்டும் என்று தூண்டிவிட்டீர்கள்.நன்றி.

Biy Okt 06, 05:06:00 AM GMT-4  
Blogger Muthu said...

முத்து,
இவர் கவிதைகளுக்கும் அவரது நிலைபாடுகளுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. இன்னும் சொல்லபோனால் இது தனி வழியில் செல்லும். கண்டிப்பாக வாசித்து பாருங்கள்.

Biy Okt 06, 05:12:00 AM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home