Font Help?

Miyerkules, Abril 26, 2006

8. இலவசங்கள் தவறில்லை!

இதை படித்தபின் என்னை நானே கிள்ளிப் பார்த்து கனவில்லை என்று தெளிந்த பின்னே(காரணம் வந்தது விகடனில்) இதை இங்கே பகிர்கின்றேன். ஜூ.வி யில் வந்த இது கட்டுரை குறித்து யாரேனும் எழுதுவார்கள் என்று நினைத்திருந்தேன். எவரும் இதுவரை எழுதாததாலும் என் வலைப்பதிவை நானே மறந்துவிடும் அபாயமிருப்பதாலும் :-) நானே இதைப் பதிவிடுகிறேன்.
பல வருடங்களாக ஜூவி மற்றும் ரிப்போர்ட்டர் படித்து வந்தாலும் சோலையின் பக்கத்தைத் தவிர வேறு எங்கும் இது போன்றக் கருத்துக்களைப் படிக்க முடியாது. இந்த சஞ்சிகைகள் பெரும்பாலும் மேட்டுக்குடி மனோபாவத்தோடு எழுதிவருபவை. ஆனாலும் இவ்வித கருத்துக்கும் இடம்கொடுத்து பிரசுரித்த ஜூவிக்கு நன்றி. கட்டுரையின் ஒரு பகுதி இங்கே.


நன்றி: ஜூனியர் விகடன்.

முழுக்கட்டுரைக்கான சுட்டி இங்கே

[இந்த ஜென்ராம் யார்? மேலதிக விவரம் யாருக்கேனும் தெரியுமா?.]

முக்கியமான பின்குறிப்பு: இலவச திட்டத்தில் வேலைதேடும் இளைஞர்களுக்கான உதவித்தொகையையும், அரிசியையும் வைத்ததில் எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. ஆனால் டிவி கொஞ்சம் ஓவருதான்...

4 Comments:

Blogger oosi said...

மாறுபட்ட கருத்து தெரிவித்து சும்மா கவனத்தை ஈர்க்க ஒரு முயற்சி.

Miy Abr 26, 09:14:00 PM GMT-4  
Blogger மா சிவகுமார் said...

இலவசமாக அடிப்படைத் தேவைகளைக் கொடுப்பது எதிர்காலத்திற்கான மக்கள் செல்வத்தை பலப்படுத்துவது என்று சொல்லலாம். மாணவர்களுக்கு சத்துணவு, மிதிவண்டி, இலவசமாக தரிசு நிலம், குறைந்த விலையில் அரிசி போன்றவை பரம ஏழைகளை பொருளாதர நடவடிக்கைகளில் ஈடுபடத் துணை புரியலாம். ஆனால் வண்ணத் தொலைக் காட்சியை இதில் பொருத்த முயல்வது கொஞ்சம் கஷ்டம்தான்.

Miy Abr 26, 09:27:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

ஓசை,
ஏதோ தெரியாதனமா வந்துச்சு போல. இருந்தாலும் பாராட்ட வேண்டிய கருத்து.

சிவகுமார,
அதே. அதனால் தான் தொலைக்காட்சி கொடுப்பேன் எனும் போது நோக்கத்தின் மீது எழும் சந்தேகங்களை தவிர்க்க முடிவதில்லை.

Miy Abr 26, 10:09:00 PM GMT-4  
Blogger SK said...

முப்பத்தைந்து வருடங்களாக மாறி, மாறி மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி பிரிந்தபோது செய்யமுடியாத கையாலாகாதவர்கள், குறிப்பிடத்தகுந்த அளவு மக்களை அப்படியே முன்னேராமல் வைத்திருப்பவர்கள், இப்போது செய்வார்கள் என நம்புவதைப் போன்ற ஒரு பேதைத்தனம் வேறொன்றும் இருக்க முடியாது!

இது பற்றிய எனது பதிவு இதோ!

"இரண்டு கூட்டணிகளும் தோற்க வேண்டும் என ஏன் சொல்லுகிறேன்?"


சமீப காலமாக இந்தத் தலைப்பில் கண்ட வாக்கியத்தை நான் சொல்லி வருவது கண்டு,

சிரிப்பவர் சிலர்!
சீண்டிப் பார்ப்பவர் சிலர்!
சீறுபவர் சிலர்!
சிணுங்குபவர் சிலர்!
சிந்திப்பவர் சிலர்?

இதை ஏன் சொல்லுகிறேன்?

கூட்டத்தோடு கோவிந்தா போடுவது போல இரண்டில் ஏதாவது ஒரு கூட்டணியை ஆதரித்து விட்டுப் போவதுதானே என கேலியும், கிண்டலும், கும்மாளமுமாக தமிழ்மணம் ரொம்பவே மணக்கிறது!

முப்பதாண்டுகளுக்கும் மேலாக, தமிழ் மக்கள் கடந்த 55 ஆண்டு கால குடியரசு ஆட்சிக் காலத்தில், இந்த இரு கழகங்களையும் நம்பி,
"இவர்கள் நமது நலனை மட்டுமே கருத்தில் கொண்டவர்கள்,
பிராந்தியக் கட்சியை ஆதரித்தால், நமக்கும், நம் சந்ததியருக்கும், பயன் இருக்கும்"
என மனப்பூர்வமாக நம்பி, மாறி, மாறி, இவ்விரு கழகங்களையும் நம்மை ஆளவைத்ததில், நாம் கண்ட நன்மைகள் என்ன, தீமைகள் என்னென்ன என்று பார்த்தால்,தீமைக்கணக்கே விஞ்சி நிற்கிறது!

அரிசியைக் காட்டியே ஆட்சிக்கு வந்த இந்த கபடவேடதாரிகள், இன்றும், ... 2006-இலும், ...அதே அரிசியை இன்னமும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றால்,
எந்தப் பிரச்சினையைக் காட்டி வந்தனரோ, அந்தப் பிரச்சினை இன்னமும் சரி செய்யப் படாமல் இருக்கிறது என்றுதானே உணரப்பட வேண்டும்?

40 விழுக்காடுக்கும் மேற்பட்ட மக்களை வறுமைக்கோட்டுக்குக் கீழே வைத்திருப்பது ஒன்றே நாம் திரும்பத் திரும்ப , மாறி, மாறி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் வழி என்னும் ஒரு எழுத்தில் இல்லா, இரகசிய உடன்படிக்கையாகவே இவ்விரு கழகங்களும் கொண்டுள்ளன என்று தெரிய வில்லையா?

மாநிலத்திலும், மத்தியிலும் தொடர்ந்து ஆட்சி, மற்றும் அமைச்சுப் பொறுப்பில் இருக்கும் வாய்ப்பினைப் பெற்றும், சொந்த தமிழ் மக்களை முன்னேற்றாமல், சொந்த மக்களை மட்டும் முன்னேற்றத் துடிக்கும் இவர்களை நம்பி மீண்டும் ஆட்சிப் பொறுப்பைக் கொடுக்க எப்படி நம் மனசாட்சி இடம் கொடுக்கும்?

10 பைசாவுக்கு வக்கில்லாமல் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள் எல்லாம், இன்று பல கோடி ரூபாய் சொத்துக் கணக்கு காட்டுகிறார்களெ; இதெல்லாம் எப்படி வெறும் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் சம்பளத்தில் சாத்தியமாகும் என தமிழ்கமே, இப்போதாவது சிந்திக்க ஆரம்பி!

இலவசங்களைக் காட்டி, உன்னை பிச்சைக்காரனாய்ப் பார்க்கும் இந்த கேடு கெட்ட கழகங்களின் கோரப்பிடியினின்று நீ விடுபடும் நேரம் வந்துவிட்டது!

தனியாய் நிற்பவனும் இலவசங்களைக் காட்ட வில்லையா என , உடனே ஒரு கூட்டம் வால் பிடித்து ஓடி வரும்!
அவர்களுக்கு இதோ என் பதில்!

VK 15 கிலோ அரிசி இலவசம் என்றதும் சிரித்த அதே கூட்டம்தான் இன்று பொருளாதார ரீதியில் இது சாத்தியமே என்று கூறுவதை கேட்டு ஆர்ப்பரிக்கும் கூட்டம்!
இது சாத்தியம் என்பது உண்மையானால்,
ஏன் இன்றுவரை அ.தி.மு.க. அதைச் செய்யவில்லை?
ஏன் இந்த ஆலோசனையை, ப.சி.யும், மு.க.வும் இதுவரை கொடுக்க வில்லை?எப்படி அய்யா இது மே 9-ம் தேதிக்குப் பிறகு சாத்தியமாகும்.....இதுவரை ஏன் செய்யவில்லை?

நீங்கள் இருவரும் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருப்பவர்தாமே?
ஓட்டுக்காக இப்படிச் சொல்ல வெட்கமாயில்லை?
கட்சி ஆரம்பித்த 2-ம் நாளிலிருந்தெ கேப்டன் சொல்லிவருவது இதைதானே?இது முடியும் என்று சொன்னவர்தான், இப்போது ஆட்சிக்கு வந்தால் நடத்திக் காட்டுவேன் என்கிறார்.

"அளகேசா! ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?"
என்று அப்போது ஒப்பாரி வைத்து ஆட்சிக்கு வந்தவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்...

"கலைஞரே! ஆண்டது போதாதா? மக்கள் காய்ந்தது போதாதா?"
"அம்மாவே! ஆண்டது போதாதா? மக்கள் அலைந்தது போதாதா?"

இவர்களொடு வால் பிடித்து வளர்ந்து விட்டு, இவர்கள் தயவால் ஒரு வளர்ச்சியைப் பெற்ற பின்னர், இன்று ஆலவட்டம் ஆடும் உதிரிக் கட்சிகளுக்கு இருக்கும் வெட்கம், மானம் பற்றி யாரும் சொல்லித் தரத் தேவையில்லை.
இந்த அடிவருடிகளை மிதியடியாக்குங்கள்!

ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு நல்லவராவது இருப்பர், வேட்பாளராக!கூடியமட்டில், கட்சி வித்தியாசம் பார்க்காமல் அந்த நல்லவருக்கு ஓட்டுப் போடுங்கள்!
என்னடா! கடைசியில் இப்படி சொல்லுகிறானே என்று வியக்காதீர்கள்!நிச்சயமாக, அந்த நல்லவர் இவ்விரு கழகங்களிலும் 'பொதுவாக' இருக்க அதிகம் வாய்ப்பில்லை என்ற துணிவில் தான் அப்படிச் சொல்லுகிறேன்!

தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாளெடுத்தவனுக்கு வாளாலேதான் மரணம்!
அது போல,அரிசியால் ஆட்சிக்கு வந்தவர்கள்,
அதே அரிசியால் இந்தத் தேர்தலில், வீழ்வது உறுதி!

வீழ்வது இவ்விரு கழகக் கூட்டணிகளாக இருக்கட்டும்!
வெல்வது தமிழக மக்களாக இருக்கட்டும்!

Miy Abr 26, 11:58:00 PM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home