Font Help?

Huwebes, Hulyo 06, 2006

15. அப்பாடி நானும் ஆறு போட்டாச்சு

பிடித்த புத்தகங்கள்.
1. சயாம் மரண ரயில் - சண்முகம். இரண்டாம் உலக யுத்தத்தின் போது மலேய தமிழ்மக்களை ஜப்பானியர் கொடுமைப்படுத்தியதை விவரிக்கும் நாவல். அப்பெரும் சோகங்களுக்கு மத்தியில் ஒர் தமிழ் இளைஞனுக்கும், தாய்லாந்து யுவதிக்குமான காதலைச் சொல்லும் நாவல். கொஞ்சம் சினிமா போலிருந்தாலும் அந்த காதல் கதை எங்கள் வீட்டிலிருக்கும் அனைவரது மனதையும் வெகுவாக கவர்ந்தது. கிட்டதட்ட வீட்டில் அனைவரும் வரிகளை மனப்பாடமே செய்து விட்டோம். அதனால்தான் எனக்கு பெண் பார்த்து விட்டு வந்து அம்மாவும், தங்கையும் "பெண் அங்சாலா(நாவலின் நாயகி) போல் இருப்பாள்" என்று சொன்ன ஒரே வரியில் தலையாட்டிவிட்டேன் :-))) . இது மலேயாவிலிருந்து எங்களுக்கு வந்த நாவல். மலேயாவிலிருக்கும் சண்முகம் என்பவர் எழுதியது. எனவே மலேசியா, சிங்கப்பூரிலிருக்கும் நண்பர்கள் அங்கே தேடிப்பார்க்கலாம். இதே சம்பவத்தை வைத்துத்தான் "End of All Wars" என்ற ஆங்கில படமும் வந்தது. ஆனால் இந்த புத்தகம் அனைத்து தரப்பாரையும் காட்டுவது போலில்லாமல் வெறும் ஆங்கிலேயரை மட்டும் முன்னிறுத்தியும் மற்றவர்களின் பங்களிப்பையோ, சோகத்தையோ சுத்தமாக காட்டாமல் எடுக்கப்பட்ட படம்.

2. பித்தன் - அப்துல் ரஹ்மான் முதலில் படித்தது அப்துல் ரஹ்மானின் பால்வீதியென்றாலும் மிக மிக பிடித்த கவிதை தொகுப்பு "பித்தன்" தான். ஏற்கனவே இதைப்பற்றி சொல்லியிருக்கிறேன். என்னைப் பொருத்தவரை இதுதான் அவரது masterpiece. அது ஏனோ விருது வாங்கிய ஆலாபனையை விட இதுதான் எனக்கு மிகவும் பிடித்தது.

3. பொன்னியின் செல்வன் - கல்கி. இதைப்பற்றி சொல்லவேண்டுமா என்ன? :-)

4. வெள்ளரி நிலத்தில் பிள்ளைப்பேறு - ருஷ்ய குறுநாவல்களின் மொழிபெயர்பு.இது சிறந்த ருஷ்ய நாவல்களின் மொழிபெயர்ப்பு. இதிலுல்ல "வெள்ளரி நிலத்தில் பிள்ளை பேறு", "நாற்பத்து ஒன்றாவது", "நூர்ஜஹான் பீவீ" போன்றவை மிக நல்ல நாவல்கள். இது இப்போது எங்கு கிடைக்குமென்று தெரியவில்லை.

5. பெரும்பாலும் எல்லா காமிக்ஸ் புத்தகங்களும்.பெரும்பாலும் எல்லோரையும் போல நானும் சிறு வயதிலிருந்தே இந்த புத்தகங்களின் ரசிகன். இப்போதும் பார்க்கும் போதெல்லாம் வாங்கி
படிப்பேன்.

6. பாலம் -ஸ்டாலின்கிராட் யுத்தம் பற்றிய நாவல்ஏழாம் வகுப்பில் பள்ளி நூலகத்திலிருந்து எடுத்து படித்தது. ஸ்டாலின் கிராட் சண்டையின் போது அருகிலிருந்த கிராமத்தை களமாக கொண்டு எழுதப்பட்ட நாவல். அந்த கிராமத்தினர் அங்கிருக்கும் ஒரு பாலத்தினின் வழியே ஜெர்மானியர் உள்ளே நுழையாமல் தடுப்பதை விவரிக்கும் புத்தகம். வெகு காலம் முன்பு படித்ததால் மற்ற விவரங்கள் நினைவில்லை. ஆனால் கதை மட்டும் இன்னும் நினைவில் உள்ளது.

காண விரும்பும் இடங்கள்.
1. நம்செங் கேம்ப் -- சயாம் மரண ரயிலில் வரும் இடம்
2. தக்னா பசார் அல்லது பாடாங் புசார் -- சயாம் மரண ரயிலில் வரும் இடம்.
3. பழைய தஞ்சையும், பழையாறையும் -- பொன்னியின் செல்வன் எபெக்ட்டுதான் வேறென்ன.
4. ருஷ்யாவின் ஸ்டெப்பி புள்வெளிகளின் அருகாமையில் உள்ள ஏதேனும் ஒரு கிராமம்.
5. சிம்லா
6. காஷ்மீர்

பிடித்த இடங்கள்
1. நான் பிறந்து வளர்ந்த எங்கள் ஊர்.
2. தாத்தா, பாட்டி வாழும் பக்கத்து ஊர்.
3. தஞ்சை பெரிய கோவில்.
4. ஊட்டி
5. ஆழ்ந்த அமைதியிலிருக்கும் இரவில் எல்லா ஊர்களும்
6. ஆரவாரமில்லா எல்லா கடற்கரைகளும்.

பிடித்த படங்கள்
1. என் பொம்முகுட்டி அம்மாவுக்கு
2. வேதம் புதிது
3. முதல் மரியாதை
4. மௌன ராகம்
5. ரோஜா
6. இதயத்தை திருடாதே.

பிடித்த பாடல்கள்
1. நீதானே என் பொன்வசந்தம் - நினைவெல்லாம் நித்யா
2. ராஜராஜ சோழன் நான் - இரட்டைவால் குருவி
3. குழலூதும் கண்ணனுக்கு - மெல்லத் திறந்தது கதவு
4. என் கண்மணி - சிட்டுக்குருவி
5. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்
6. செல்லமே செல்லமே என்றாயடி - ஆல்பம்
[என்ன செய்றது. இப்பவெல்லாம் இதுபோல பாட்டு தான் பிடிக்குது. அதுவும் கடைசி பாட்டு loopல ஓடிகிட்டு இருக்கு. :-)]

பிடித்தவை ஆறு.
1. புத்தகங்கள்
2. குழந்தைகள்
3. நிசப்தமான நிலவொளியுள்ள இரவுகளில் ஊர் சுற்றுவது.
4. மூன்றாம் வகுப்பு இரயில் பயணங்கள்.
5. இணையத்தில் மேய்வது.
6. ஜவா நிரலியுடன் மணிக்கணக்கில் சண்டை போடுவது. (Esp. with NullPointer Exception :-))

இதுவரை எந்த சங்கிலிப்பதிவு எழுதியதில்லையாதலால் வெற்றி அழைத்ததும் ஏதேதோ எழுதலாமென்று தோன்றினாலும் எழுதுவதற்கு அதிக நேரம் ஒதுக்க முடியாததாலும் மற்றவர்கள் போட்டிருக்கும் அதே வழிமுறையில் நானும் போட்டுவிட்டேன். கீழே உள்ளவர்களையும் அழைக்கிறேன். இந்த நண்பர்களுக்கு சங்கிலி பதிவு பிடிக்காவிட்டால் எழுத வேண்டிய கட்டாயமில்லை. எழுதினால் மகிழ்வேன்(வோம்).

1. செந்தில் குமரன் (குமரன் எண்ணம்)
2. வடுவூர் குமார்
3. ஓசை
4. ராஜகுமார்
5. ஜெயபால்
6. பிரியமுடன் கேபி

13 Comments:

Blogger வடுவூர் குமார் said...

சோழ நாடான்
ஆமாங்க அதே வடுவூர் தான்.நீங்கள் அந்த பக்கமா?
பிறந்தது மட்டும் தான் அங்கே. படித்து சுத்தியது எல்லாம் நாகப்பட்டினம்.
ஆறு அழைப்புக்கு நன்றி.நாகை சிவா கூட கூப்பிட்டிருந்தார்.முயற்சிக்கிறேன்.

Huw Hul 06, 10:41:00 PM GMT-4  
Blogger செந்தில் குமரன் said...

ரொம்ப நன்றிங்க சோழநாடான் உங்கள் பதிவுக்கு அதிகமாகக் கூட நான் வந்ததில்லை இருப்பினும் என்னையும் மதித்து ஆறு போட கூப்பிட்டதற்கு மிகவும் நன்றி. நெகிழ வைத்து விட்டீர்கள். நம்மளை யாரு கூப்பிடப் போறாங்கன்னு இதைப் பற்றி அதிகம் யோசிக்கலை. யோசிச்சு போடறேன்.

நம்ம செம்புலப் பெயல்னீரார்தான் ஞாபகத்துக்கு வரார்.

சயாம் மரண ரயில் படித்ததில்லை. படிக்க வேண்டும்.

நீதானே என் பொன் வசந்தம், நீ ஒரு காதல் சங்கீதம் எனக்கும் பிடித்த பாடல்கள்.

மூன்றாம் வகுப்பு ரயில் பயணங்களா? என்னாங்க சொல்றீங்க ஏதேனும் கதை இருக்க வேண்டுமே?

Huw Hul 06, 11:52:00 PM GMT-4  
Blogger வெற்றி said...

சோழநாடான்,
அழைப்பை ஏற்று ஆறுப்பதிவு போட்டதற்கு மிக்க நன்றி.அருமையாகவும் அழகாகவும் ஆறுப்பதிவு போட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.சயாம் மரண ரயில் நாவலைப் படிக்க வேண்டும் போல் உள்ளது , உங்களின் பதிவைப் பார்த்ததும்.

Biy Hul 07, 01:50:00 AM GMT-4  
Blogger சோழநாடன் said...

வடுவூர் குமார்,
ஆமாங்க நானும் அந்த பக்கம் தான்.

Biy Hul 07, 02:31:00 AM GMT-4  
Blogger சோழநாடன் said...

குமரன்(எண்ணம்),
நான் உங்க பதிவை அவ்வப்போது படிப்பேன்க. என்ன ஒன்னு அப்பப்போ alt+tab போட்டு படிக்கிறதால பின்னூட்டங்கள் அதிகம் போடுவதில்லை. சயாம் மரண ரயில் கிடைச்சா படிங்க. நிறைய உண்மை சம்பவத்த வச்சு எழுதியிருந்தாலும் கொஞ்சம் சினிமாட்டிக்கா இருக்கும். ஆனாலும் ஏனோ எங்க வீட்டுல அம்மா, அப்பா, தங்கை எனக்கு எல்லொருக்கும் ரொம்ப பிடித்தது.

Biy Hul 07, 02:32:00 AM GMT-4  
Blogger சோழநாடன் said...

வெற்றி,
நன்றிங்க. சயாம் மரண ரயில் மேலே குமரனுக்கு சொன்னதுதான். கிடைச்சா படிங்க. என்னை பொருத்தவரை அது கொஞ்சம் டைடானிக் போல. அதாவது ஒரு பெரும் சோகத்திடையே முளைக்கும் மெல்லிய காதல். அது கொஞ்சம் உணர்வு பூர்வமாயிருக்கும். மத்தபடி பெரும்
இலக்கியமாவென்றெல்லாம் தெரியாது.

Biy Hul 07, 02:34:00 AM GMT-4  
Blogger முத்துகுமரன் said...

பாட்டுல நான். 4/6

6 பாட்ட முன்னாடி கேட்டுகிட்டு இருந்தேன். இப்ப விட்டுட்டேன் :-)

Biy Hul 07, 09:00:00 AM GMT-4  
Blogger PKP said...

சோழநாடன்,
நீங்கள் ஆறு சங்கிலியாலே தாக்கிட்டீங்களே? எப்படி பெரிய பெரிய பதிவெல்லாம் எழுதுரீங்களோ?.முயல்கிறேன்.என்னை ஆற்றோட விட்டதுக்கு நன்றி. :)

Biy Hul 07, 02:08:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

வாங்க முத்துகுமரன்,
என் அறையில் உள்ள நண்பரும் கிடடதட்ட என் நிலையில் தான் உள்ளார். எனவே அறையில் 6வதுதான் தொடர்ந்து ஓடுது. மத்ததெல்லாம் அவ்வப்போதுதான் :-)

Biy Hul 07, 04:58:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

நன்றிங்க வெற்றி,
நாலு இப்ப ஆறானது. அடுத்து என்னன்னு தெரியலை :-(

Biy Hul 07, 04:58:00 PM GMT-4  
Blogger செயபால் said...

சோழ நாடான்,
நீங்கள் அழைத்தபடி நானும் ஆறு போட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது சென்று பாருங்கள்.
அன்புடன்
ஜெயபால்

Lun Hul 24, 03:28:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

ஜெயபால்,
நன்றி. கொஞ்சம் வேலை அதிகமிருந்ததால் இந்த வாரம் வலைப்பதிவு பக்கம் வரவில்லை. இன்றுதான் பார்த்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

உங்கள் ஆறு அருமையாக உள்ளது. உங்கள் முதல் விருப்பம் நன்றாக உள்ளது. நிறைவடைந்தால் நன்றாகத்தானிருக்கும்

Huw Hul 27, 08:48:00 PM GMT-4  
Anonymous Hindi-nagpakilala said...

thanks for your comments. i forward it to my friends. - anbudan, suma.

Lin Ago 20, 11:51:00 PM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home