Font Help?

Lunes, Oktubre 02, 2006

17. நட்சத்திர வணக்கம்

திடீரென தூக்கத்திலிருந்து எழுபவன் போல சட்டென தோன்றும் சில கணங்களில் மட்டுமே எழுதி பழக்கப்பட்ட என்னை இந்த வாரம் முழுவதும் எழுத சொல்லியிருக்கிறார்கள். முன்பே எழுதி தயாராய் வைத்துக் கொண்டு போடலாமென்றாலும் இன்னும் பழைய பழக்கம் மாத்திரம் முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டு அடம் பிடிக்கிறது. எனவே இந்த வாரம் எந்த வித முன் தயாரிப்பும் இன்றி, நதியில் மிதந்து செல்லும் ஓர் கட்டையைப் போல தோன்றியதை அதன் போக்கிலேயே எழுதிக்கொண்டு போவதாய் உத்தேசம்.

நான் பெரும்பாலும் பலரைப் போலவே இப்படித்தான் வாழ்விலும் அது போகும் போக்கிலேயே மிதந்தபடி சென்று கொண்டிருக்கிறேன் அதன் சுழல்களையும் மோதும் அலைகளையும் ரசித்தபடி. இதற்கு "பாதுகாப்பான" இடத்தில் பிறந்ததும் வளந்ததும் கூட காரணமாயிருக்கலாம். என்னதான் நதியின் போக்கிலேயே போனாலும் சில சமயங்களில் நான் நினைத்த வழி மட்டுமே அந்த நதி செல்லவேண்டும் அதற்காக முழுவதுமாக களமிறங்கவும் தயங்குவதில்லை. ஒவ்வொரு முறையும் மோதி வெற்றிபெறும் போது கொஞ்சமேனும் தலையில் ஏறிவிடும் பாரத்தை குறைக்க பலர் துணைதருவதுண்டு, அதில் மிக முக்கியமானவர் காந்தி. தன் வாழ்க்கையின் திசைகளை முழுதுமாக தானே தீர்மானித்து அதிலேயே பயணம் செய்தவர்.

இவரைப் பற்றி ஆரம்பத்தில் பாடபுத்தகங்கள் கட்டமைத்த புனிதபிம்பமே இருந்தாலும் இப்போது முற்றிலும் மாறிவிட்டது. பாடபுத்தகங்கள் கட்டமைக்கும் இந்த புனித பிம்பங்கள் பற்றி எனக்கு நிறைய விமர்சனம் உள்ளது. இவை பெரும்பாலும் இலேசான காற்றில் உடைந்து விழும் மணல் சிற்பம் போல சிறு விமர்சனத்தில் நொறுங்கிப்போகின்றன. அதிலும் உடைந்து விழுபவை யோசிக்க வெளியை அளிக்காமல் முற்றிலுமாய் எதிற்புறத்தில் நிறுத்துகின்றன. இதைப்பற்றி இன்னொருநாள் சவகாசமாய் உட்கார்ந்து பார்க்கவேண்டும். காந்தி பிம்பமாயிருந்து, உடைந்து எதிர்ப்பக்கம் போய் மீண்டும் என்பக்கம் வந்து விட்டார். இப்போதெல்லாம் எனக்கு அவர் கடவுள் உருவில் காட்சி தருவதில்லை. ஆனாலும் சக மனிதராக மிக அதிகமாய் வசீகரிக்கிறார். தனிமனிதனாக நின்று மொத்ததையும் மாற்றி போட்டார்.

பாட நூல்களில் சொல்வதுபோல அவர்தான்(அல்லது அவர் மட்டும்) சுதந்திரம் வாங்கித்தந்தார் என்று சொல்ல மாட்டேன். ஆனாலும் அவர் பங்கு மற்ற அனைவரையும் விட மிகப்பெரியது. நம்முடைய வாழ்க்கையின் ஓட்டத்தை நம் விருப்பப் படியே நடத்த கூட பெரும்பாடயுள்ள நேரத்தில் தனது வாழ்க்கை ஓட்டத்தை மட்டுமல்லாமல் அவர் சார்ந்த சமூகத்தினதின் ஓட்டத்தையும் மாற்றி அமைத்தவர். மற்றவற்றை விட இது எனக்கு அவரின் மற்ற சாதனைகளை விட பெரும் செயலாக தோன்றுகிறது. இன்று காந்தி ஜெயந்தி. இது வெறும் நினைவூட்டலாக மட்டும் இல்லாது அவரை மீள்வாசிக்கும் நிகழ்வாக அமைந்தால் நல்லது. ஆனாலும் சில புனிதபிம்பங்கள் உருவாக்கிய "காந்தி மஹான்" எனும் சொல் இதையெல்லாம் அனுமதிக்குமாவென்றும் தெரியவில்லை.

[நண்பர்களுக்கு, சட்டென முடிவான ஒரு பயணத்தின் படி இப்போது washington லிருந்து wiscosin சென்றுகொண்டிருக்கிறேன். எனவே நாளை வரை மட்டுறுத்தல் தாமதமாகலாம். மன்னிக்கவும்]

29 Comments:

Blogger வெற்றி said...

சோழநாடான்,
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

Lun Okt 02, 01:30:00 AM GMT-4  
Blogger சின்னக்குட்டி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

Lun Okt 02, 03:16:00 AM GMT-4  
Blogger Chandravathanaa said...

வாழ்த்துக்கள்

Lun Okt 02, 05:36:00 AM GMT-4  
Blogger ENNAR said...

கால வெள்ளத்தின் போக்கில் தான் நாம் போக வேண்டும் வாழ்வில் எதர் நீச்சல் போட பழகிக் கொள்ள வேண்டும்

Lun Okt 02, 06:09:00 AM GMT-4  
Blogger G.Ragavan said...

வாருங்கள் சோழநாடன். இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள். நட்சத்திர வாரத்திற்கு எனது வாழ்த்துகள்.

Lun Okt 02, 08:25:00 AM GMT-4  
Blogger Johan-Paris said...

"இப்போதெல்லாம் எனக்கு அவர் கடவுள் உருவில் காட்சி தருவதில்லை. ஆனாலும் சக மனிதராக மிக அதிகமாய் வசீகரிக்கிறார். தனிமனிதனாக நின்று மொத்ததையும் மாற்றி போட்டார். "

சோழநாட்டாரே!
வருக ,நட்சத்திரமாக ஒளிதருக!
தங்கள் காந்தியார் பற்றிய மேற்படிக் கூற்றிடன் ;நான் ஒத்துப் போகிறேன். ஆனால் காந்தி மாத்திரமல்ல இந்த "ஒளிவட்டத்துள்" உள்ளவர்கள். எல்லோரும் நம்போல் தான் ;என என் எண்ணத்தில் வந்து போகும்.
ஈழத்தவரெனினும்; காந்தியை எங்களுக்கும் தாத்தா எனத் தான் சொல்லித் தந்தார்கள். அன்றைய வீடுகளில்,காந்தியாரின் பொக்கைவாய் சிரிப்புடன் ஓர் படம்;விறாந்தைகளில் தொங்கும். அதனால் அவர் இன்றும் எம்மனத்தில் தொங்குகிறார்.
யோகன் பாரிஸ்

Lun Okt 02, 08:37:00 AM GMT-4  
Blogger Sivabalan said...

நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

Lun Okt 02, 09:37:00 AM GMT-4  
Blogger Sri Rangan said...

வணக்கம் சோழநாடான்!

வாழ்த்துகிறேன்,
தொடர்ந்து எழுதுங்கள்.

Lun Okt 02, 11:21:00 AM GMT-4  
Blogger KARTHIKRAMAS said...

சோழநாடன்,

நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

Lun Okt 02, 12:44:00 PM GMT-4  
Blogger gulf-tamilan said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள்!!

Lun Okt 02, 06:45:00 PM GMT-4  
Blogger ஆவி அம்மணி said...

வாழ்த்துக்கள் நண்பரே!

இனிய நண்பரொருவர் நட்சத்திரமாகியிருப்பது குறித்து மகிழ்ச்சி!

Mar Okt 03, 01:18:00 AM GMT-4  
Blogger பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் சோழநாடன், நட்சத்திர வாரத்துக்கு..

உங்கள் அறிமுகம் படித்தேன்.. சொல் ஒரு சொல்லில் "உங்கள் பெயரை" அலசி ஆராய்ந்தது நினைவுக்கு வருது(அப்போவே நினைத்தேன்), மூன்று பேரில் க் சேர்த்தவர் நீங்கள் தானா? :)

Mar Okt 03, 02:10:00 AM GMT-4  
Blogger மலைநாடான் said...

நசாழநாடன்!

இனிமையான நட்சத்திரவாரமாக அமைய நல்வாழ்த்துக்கள்.

Mar Okt 03, 10:16:00 AM GMT-4  
Blogger நற்கீரன் said...

காந்தி உலக்கு மாற்று வழிகளை உணரவைத்தார். 1 மில்லியன் மக்கள் சுயமரியாதையுடன் வாழ வழிசெய்ய உதவினார். இன்று இந்தியா கொஞ்சமாவது சுயமாக சிந்திக்கின்றதென்றால் அதன் ஒரு ஊற்று காந்தி.

உங்கள் நட்சத்திர வாரம் நன்றே அமைய வாழத்துக்கள்.

Mar Okt 03, 09:48:00 PM GMT-4  
Blogger நற்கீரன் said...

காந்தி உலக்கு மாற்று வழிகளை உணரவைத்தார். 1 மில்லியன் மக்கள் சுயமரியாதையுடன் வாழ வழிசெய்ய உதவினார். இன்று இந்தியா கொஞ்சமாவது சுயமாக சிந்திக்கின்றதென்றால் அதன் ஒரு ஊற்று காந்தி.

உங்கள் நட்சத்திர வாரம் நன்றே அமைய வாழத்துக்கள்.

Mar Okt 03, 09:48:00 PM GMT-4  
Blogger vssravi said...

இந்த வார நட்சத்திரம் தம்பி சோழநாடானுக்கு வாழ்த்துக்கள்.

-ரவிச்சந்திரன்

Mar Okt 03, 10:18:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

நண்பர்களே எதிர்பாரா மற்றும் தவிர்க்கவியலா ஒரு பயணத்தினால் இருநாட்கள் ஏதும் எழுத இயலாமல் போய்விட்டது. பின்னூட்டமிட்டவர்களுக்கு மறுமொழிகூறவும் முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்

Miy Okt 04, 08:37:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

வெற்றி, சின்னக்குட்டி, சந்திரவதனா, வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

Miy Okt 04, 08:37:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

என்னார் ஐயா எதிர்நீச்சலும் உண்டு. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

Miy Okt 04, 08:37:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

ராகவன் வாழ்த்துகளுக்கு நன்றி

Miy Okt 04, 08:37:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

யோகன் உண்மைதான். அதீத புகழப்போய் அது இவ்விதமான வட்டங்களை உண்டாக்கி விடுகிறது. வாழ்த்துகளுக்கும் நன்றி.

Miy Okt 04, 08:38:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

சிவபாலன், சிறீரங்கன், கார்த்திக், gulf-tamilan வாழ்த்துகளுக்கு நன்றி

Miy Okt 04, 08:47:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

ஆவி அம்மணி, வாங்க, வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

Miy Okt 04, 08:49:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

பொன்ஸ்,
ஆமாம் நம்ம பேராச்சே அதுதான் நானும் உள்ளே குதிச்சுட்டேன்.
அது நண்பன் தான். நானும் ஆங்கிலத்தால் "க்"கை தொலைத்தவன். [மற்றவர்களுக்காக: இதன் பின்புலம் இங்கே இருக்கு]

Miy Okt 04, 08:49:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

மலைநாடான் வாழ்த்துகளுக்கு நன்றி.

Miy Okt 04, 08:55:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

நற்கீரன் அவரது சேவை பெரிது. இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் கடவுளாக்குவதோடு நான் ஒப்பவில்லை. வாழ்த்துகளுக்கு நன்றி.

Miy Okt 04, 08:55:00 PM GMT-4  
Blogger சோழநாடன் said...

ரவியண்ணா, வாழ்த்துகளுக்கு நன்றி.

Miy Okt 04, 08:55:00 PM GMT-4  
Blogger வடுவூர் குமார் said...

சோழநாடான்,
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

Huw Okt 05, 04:09:00 AM GMT-4  
Blogger செந்தில் குமரன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

Biy Okt 06, 02:50:00 AM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home