19. அமெரிக்காவில் ஒரு புனித பிம்பம்
முதலில் இந்தியாவின் சமூக அக்கறையின்மை பற்றியதான பேச்சு பின்பு பொருளாதாரம் பற்றி திரும்பியது. இந்தியாவில் பெரும்பாலும் பணக்காரர்கள்தான் அதிக பணக்காரர்கள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள் ஏழைகள் மிக ஏழைகளாகிக்கொண்டிருக்கிறார்கள் என்று சமூகத்தை வசைபாடிக்கொண்டிருந்தார். அதற்கான காரணம் அரசாங்கமென்றும் சொல்லிக்கொண்டிருந்தார். நான் அதிகம் கேட்டுக்கொண்டிருந்தேன்.
இப்படியாக சென்று கொண்டிருந்த பேச்சினிடையே "இப்போது பாருங்கள் தேவையில்லாமல் இடஒதுக்கீடு என்று தேவையில்லாமல் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கிறார்கள்" என்றார். அட நம்ம பக்கம் வர்ராரே என்று சுதாரித்து "ஏங்க இடஒதுக்கீடு தப்பா" என்றேன். பின்ன தகுதியில்லாதவர்கள் வேலைக்கு வந்தால் நாடு எப்படி முன்னேறும் என்று ஆரம்பித்தவர் அதுபற்றியும் ஒரு பாட்டம் பேசித்தீர்த்தார். இடஒதுக்கீடு இல்லையென்றால் அவர்களை வேறு எப்படி முன்னேற்றுவது என்றால் அதற்கு பதிலில்லை. ஆனால் இடஒதுக்கீட்டை ஏற்கனவே அனுபவித்தவர்களே அனுபவிப்பதும் அந்த இடங்கள் காலியாக இருப்பதும்தான் பெரிதாக இருக்கிறது அவருக்கு. ஏற்கனவே இடஒதுக்கீட்டில் வேலைக்கு சேர்ந்தவர்கள் எத்தனை சதம் இன்னும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் எவ்வளவு பேரென்பது அவருக்கு கவலையில்லை. இந்தியாவில் எந்த திட்டம் நூறு சதவீதம் முழுமையாக நடக்கிறது ஆனால் இதற்கு மட்டும் ஏனிந்த ஆரவாரம் என்பதற்கும் விடையில்லை. அவர்கள் தலைமுறைகளாக அடிமைப்பட்டிருப்பது பற்றிகவலையில்லை. ஆனால் இன்று ஒரு தலித்மாணவனைவிட ஒருமதிப்பெண் அதிகம் பெற்றும் இடம் கிடைக்காவிட்டால் அது இந்தியாவின் முன்னேற்றத்தையே தடுக்குமாம். இத்தனைக்கும் கொஞ்சம் முன்புதான் இந்தியாவின் கல்விமுறையப் பற்றியும் கவைக்குதவாத மதிப்பெண்கள் இடத்தை நிர்ணயம் செய்வதையும் சொன்னார்.
அவர் சொன்ன ஒவ்வொரு காரணத்திற்கும் பதில் சொன்னேன் (எல்லாம் பாதி வலைப்பதிவு உபயம்). என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீங்க. அதன் பிறகு எங்கள் மாலை சந்திப்பு முடிவுக்கு வந்தது :-))
இப்படியாகத்தான் நாம் புனித பிம்பங்களாகவே வளர்ககப்படுகிறோம். தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டு மாற்று கருத்தை சற்றே திரும்பி பார்க்கக்கூட விரும்புவதில்லை. ஒவ்வொருவர் முதுகிலும் புனிதமென்று பெரும் அழுகலை முதுகில் சுமத்தப் பட்டிருக்கிறது . ஊடகங்களும், "பெரியவங்களும்" இதை செவ்வனே கட்டமைக்றார்கள். எதிர்த்து கொஞ்சம் பேசினாலும் நீங்க "ரவுடியாக" பார்க்க படுவீர்கள். நானும் கல்லூரி காலத்தில் இப்படியான புனிதனாக யோசித்துக்கொண்டிருந்தவன் தான். இன்று திரும்பி பார்க்கையில் எல்லாம் வேடிக்கையாக தோன்றுகிறது. ஆனால் இன்னும் முழுமைபெறவில்லை. கழுவ வேண்டியது இன்னுமிருக்கிறது.
இன்னும் எனக்கு, என்பிள்ளைகளுக்கு, எனக்கு தெரிந்தவர்களுக்கு இடஒதுக்கீட்டால் இடம் கிடைக்கவில்லை / கிடைக்காமல் போக போகிறது என்பதால் மட்டும் இதை எதிர்ப்பவர்கள்
ஒருமுறையேனும் எதிர்புறத்தை பார்க்கமுடியுமா. அதற்காக இரட்டை தம்ளருக்கு பதில் பிளாஸ்டிக் தம்ளரை பற்றி யோசிக்க சொல்லவில்லை. இரண்டாவது தம்ளரில் நீங்கள் குடிப்பதாக நினைத்து இதை பற்றி யோசிக்க முடியுமா. மேலாக்கை கூட நீக்கி உலவ விட்ட வக்கிரம் பிடித்த இந்த சமுதாயத்தில் இப்படியாக வரும் ஒருசில சிறு கொழுக்கொம்புகளை எதிர்த்து முனகக்கூட யாருக்கும் அருகதையில்லை.
இது வலைப்பூவின் புனித பிம்பங்களின் மனசாட்சிக்கு ஒரு கேள்வி. உங்களுக்கு ஆகாமல் போனதலும் இவனெல்லாம் நமக்கு சரியாக வருகின்றானே என்றும் தானே இடஒதுக்கீடு, திராவிடம் இதையெல்லாம் எதிர்க்கின்றீர்கள். நேர்மையான பதிலை இங்கு சொல்ல வேண்டாம். வலைப்பூவில் அடுத்தமுறை தேசியம், தகுதி என்றெல்லாம் ஜல்லியடிக்கும் போது உங்களுக்குள் சொல்லிப்பாருங்கள்.
28 Comments:
சோழா ..!
ஒரு + குத்து !
நல்ல பதிவு சோழநாடன்.
தன்னுடைய நிலையை தக்க வைப்பதுதான் இங்கு பலபேருக்கு கொள்கையாக இருக்கிறது.
செய்திதாளை படித்துவிட்டு அப்படியே அதை தம் கருத்தாக அடித்துவிடுவார்கள்.துக்ளக் படித்துவிட்டு அடித்துவிடுவதும் உண்டு.
கோவி.கண்ணன்
நன்றிங்க.
முத்து(தமிழினி)
அதேதான். அதை மறைக்கத்தான் மற்ற ஜல்லிகளெல்லாம்.
இட ஒதுக்கீட்டினை எதிர்ப்பவர்கள் எல்லோரும் பிற்போக்கு கருத்துடையவர்கள்
அல்ல.வெறும் ஜாதிய அடிப்படையில்
அது இருப்பதை எதிர்ப்பதில் என்ன தவறு.ராமதாஸின் பேரன்களுக்கும்,
கருணாநிதியின் பேத்திகளுக்கும் இட ஒதுக்கீடு தேவையா
அனானி,
என் கேள்வி இதுதான்.
ராமதாஸ்க்கும், கருனாநிதிக்கும் எத்தனை பேரன்கள் இருக்கிறார்கள். அந்த ஒரு சிலருக்காக மற்ற அனைவரையும் கீழேயே வைத்திருக்க வேண்டுமா? இந்த திட்டத்தில் கொஞ்சம் ஓட்டை இருக்கலாம். இந்தியாவில் ஓட்டையில்லாமல் 100% முழுமையாக உள்ள திட்டம் எதுவென்று சொல்லுங்கள். பின்புறகதவுகளை அடைக்கவேண்டுமென்றால் இதற்கு முன் மூட வேண்டிய கதவுகள் நிறைய இருக்கிறது. முதலில் அதை மூடிவிட்டு பின்பு இங்கு வரலாம்,
//தன்னுடைய நிலையை தக்க வைப்பதுதான் இங்கு பலபேருக்கு கொள்கையாக இருக்கிறது.//
இதில் என்ன தவறு கண்டீர்கள்? இல்லை நீங்கள் அனைவரும் செய்வது/சொல்வது இதிலிருந்து எப்படி மாறுபட்டது? அவரவர் கருத்து அவரவருக்கு உயர்ந்தது. கொண்ட கருத்தின் உயர்ச்சிக்கு உழைப்பதை விட்டு விட்டு, அவன் கருத்து நொள்ளை, இவன் கருத்து நொண்டி என்று ஏன் பதிவிட வேண்டும்?
மாற்றுக் கறுத்தை எதிர்கொள்வதன் தாக்கத்தை சகிக்கத் திராணியில்லாதவர்கள் இப்படி பேசாமல் திடீரென்று பின்வாங்குவது தெரிந்த்து தான். இதை எல்லா "கேம்ப்" ஆட்களிடமும் பார்க்கலாம். மார்க்சிஸ்டுகள் மட்டும் புனிதப் பிம்பங்களை உருவாக்கவில்லையா என்ன?
இட ஒதுக்கீடு பற்றி: எதிர்ப்பவர்கள் அல்லது மாற்றுக் கருத்து சொல்பவர்கள் எல்லாரும் மனசாட்சி இல்லாதவர்கள் என்றெல்லாம் ஒரேயடியாக அடிக்கலாமா சோழநாடன் அவர்களே?
இது பற்றி திண்ணையில் நான் எழுதியதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் -
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20606308&format=html
Krishna
மற்றவர்கள் என் காலுக்கு கீழேதான் இருக்க வேண்டுமென்ற கொள்கை வைத்திருப்பவரிடம் அதை விமர்சிக்காமல் என்ன செய்வது. இதைத்தான் கொள்கைகளை கொஞ்சம் நேர்மையும், சமூக அக்கறையும் கலந்து மீள் பரிசோதனை செய்ய சொன்னேன்.
//ராமதாஸ்க்கும், கருனாநிதிக்கும் எத்தனை பேரன்கள் இருக்கிறார்கள். அந்த ஒரு சிலருக்காக மற்ற அனைவரையும் கீழேயே வைத்திருக்க வேண்டுமா?//
மிகவும் நியாயமான கேள்வி. இதையே தான் பொதுவாக பலரும் சொல்கிறார்கள். இவர்கள் போன்றவர்களை (பொருளாதாரத்தில் முன்னேறிவிட்ட அனைவரையும்) விலக்கி விட்டு இட ஒதுக்கீடு செய்யுங்களேன்? எது உங்களைத் தடுக்கிறது?
You are right. upper class never worried about India. Tamils fight for Social justice in Sri Lanka.
But we fight to suppress our own Citizens in India.
////
மார்க்சிஸ்டுகள் மட்டும் புனிதப் பிம்பங்களை உருவாக்கவில்லையா என்ன?
////
எனக்கு விமர்சனமில்லா எந்த புனித பிம்பங்களும் ஏற்புடையதல்ல...
திண்ணைக்கு வந்து வெகு நாளாயிற்று. உங்கள் கட்டுரையை படித்து விட்டு பிறகு கருத்து சொல்கிறேன்.
krishna,
////////
இவர்கள் போன்றவர்களை (பொருளாதாரத்தில் முன்னேறிவிட்ட அனைவரையும்) விலக்கி விட்டு இட ஒதுக்கீடு செய்யுங்களேன்? எது உங்களைத் தடுக்கிறது?
////////
இது மூடவேண்டிய பின்புற வாசல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதற்குதான் "பின்புறகதவுகளை அடைக்கவேண்டுமென்றால் இதற்கு முன் மூட வேண்டிய கதவுகள் நிறைய இருக்கிறது. முதலில் அதை மூடிவிட்டு பின்பு இங்கு வரலாம்" என்று சொன்னேன்.
அனானி,
//
Tamils fight for Social justice in Sri Lanka
//
நாமும் அதேதான். ஆனால் களமும், முறையும் வேறு
ஒரு + குத்து!
நன்றி ஜோ
//இது மூடவேண்டிய பின்புற வாசல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதற்குதான் "பின்புறகதவுகளை அடைக்கவேண்டுமென்றால் இதற்கு முன் மூட வேண்டிய கதவுகள் நிறைய இருக்கிறது. முதலில் அதை மூடிவிட்டு பின்பு இங்கு வரலாம்" என்று சொன்னேன்.//
இது இப்போது கட்டும் வீடு, பழைய மறாமத்து பார்க்கும் காண்ட்ராக்ட் தனியாக தரப்படும், அப்போது அந்த பழைய கதவுகளை எடுத்துவிட்டு சுவர் வைத்து மூடலாம்....இது புதுவீடு, இதில் குடிபுகும் முன்பே இந்த கதவினை வைக்காதீர் என்பது தவறா?
//அவர் சொன்ன ஒவ்வொரு காரணத்திற்கும் பதில் சொன்னேன் (எல்லாம் பாதி வலைப்பதிவு உபயம்).
//
இது வெகுசன ஊடகத்திலும் பரவ வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன்.
நன்றி
/////////
இது புதுவீடு, இதில் குடிபுகும் முன்பே இந்த கதவினை வைக்காதீர் என்பது தவறா
/////////
இது மட்டுமே உன்மையான நோக்கமாக இருந்து வேறு ஏதேனும் Hidden agenda இல்லையென்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலும் எதிரான குரல்களில் அப்படியேதும் தெரியவில்லையே.
கண்டிப்பாக குழலி,
என் பல எண்ணங்கள் வலைப்பதிவுகளால் சுயபரிசோதனைக்குள்ளாகியிருக்கின்றன. நிறைய கட்டிகள் உடைந்திருக்கின்றன.
//இதில் என்ன தவறு கண்டீர்கள்? இல்லை நீங்கள் அனைவரும் செய்வது/சொல்வது இதிலிருந்து எப்படி மாறுபட்டது? அவரவர் கருத்து அவரவருக்கு உயர்ந்தது.//
krishna,
you have misunderstood. பிறப்பினாலே அதிஷ்டத்தினாலே நல்ல நிலைமைக்கு வந்தவர்கள் அடுத்தவர்களும் நான் பெற்ற முன்னேற்றைத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று இருக்கும் எண்ணத்தைத்தான் நான் கூறினேன்.
//நானும் கல்லூரி காலத்தில் இப்படியான புனிதனாக யோசித்துக்கொண்டிருந்தவன் தான். இன்று திரும்பி பார்க்கையில் எல்லாம் வேடிக்கையாக தோன்றுகிறது. ஆனால் இன்னும் முழுமைபெறவில்லை. கழுவ வேண்டியது இன்னுமிருக்கிறது. //
சோழ நாடான் இந்த முத்துகுமரனும் அப்படித்தான். அழுக்குகளை கழுவத் தொடங்கி இருக்கிறேன்.
இட ஒதுக்கீடு என்பது மக்களுக்கு எதன் பெயரால் கல்வி மறுக்கப்பட்டதோ அதன் பெயரில் தருவதுதான்.
பொருளாதார அடிப்படையில் வேண்டும் என்பவர்கள் மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் தர ஒப்புக்கொள்வார்களா? அனைவருக்கும் இதன் மூலம் சமத்துவம் கிடைக்குமே.
வலுவுள்ளன் வாழ்வான் என்று சொல்லித் திரிகிறார்களே, இதற்கு ஒப்புக் கொள்ளட்டுமே. வலு உள்ள மக்கள் இனம் வாழ்ந்து கொள்ளும்
எல்லாவகை புனித பிம்பங்களும் இன்று நொறுக்கப்பட்டு வருகின்றன.
அவை தொடர்ந்தும் நடைபெற வேண்டும்.
நட்சத்திர வாழ்த்துகள்
சோழநாடன்,
நல்ல பதிவு
//இது வலைப்பூவின் புனித பிம்பங்களின் மனசாட்சிக்கு ஒரு கேள்வி. உங்களுக்கு ஆகாமல் போனதலும் இவனெல்லாம் நமக்கு சரியாக வருகின்றானே என்றும் தானே இடஒதுக்கீடு, திராவிடம் இதையெல்லாம் எதிர்க்கின்றீர்கள்//
இன்னும் இப்படியே தட்டையான எண்ணத்திலேயே இருந்து கொண்டிருப்பது தான் உங்கள் அழுக்குகளுக்குக் காரணம்-னு நெனக்கிறேன்..
எல்லா கோணத்துலயும் சிந்தியுங்கள்.. இந்தியா இப்போ இருக்குற நெலமைக்கு.. உலகளவுல நெலவுற போட்டி மனப்பான்மைக்கு நாம இன்னும் கொஞ்சம் aggressive ஆகத்தான் இருக்க வேண்டும்.. எல்லாரும் தான் முன்னேற வேண்டும்..
Think of it of the analogy with bottom line and topline.. though we definitely need to improve the bottom line we should not leave sight of the topline (achieving among global palyers). Reservation focusses on bottomline.. And aggressive tactics to put too much focus on the reservation will take out our current market share for the global markets..
சும்மா குண்டு சட்டிக்குள்ளாறயே குதிரை ஓட்டிக்கிட்டிருக்காமல்.. கொஞ்சம் வெளியிலயும் கொஞ்சம் பாருங்கண்ணா...
அன்புடன்,
சீமாச்சு..
Nice write-up...you got my (+) vote.
You weren't alone, I was same kind of dude in college, now realize the genuniety of this and believe we need to have a reservation more aggressive than one now or the one in proposal.
KVD.
I have argued against the current reservation policy for OBCs.I have advocated an affirmative action policy taking into account gender and poverty.Caste should not be the sole criterion.Equality is
very important.Beyond a point reservation results in reverse
discrimination.69% reservation is
a mockery of principle of equality.
There is nothing wrong in evaulating the reservation policy and ensuring that only the needy get the benefits.The current system is skewed in favor of those who are rich and powerful.They do
not want to give up the benefits.
Many academics have argued against
the current reservation system.Try to think beyond stereotypes and
preconceived notions.
இட ஒதுக்கீட்டினை எதிர்ப்பவர்கள் எல்லோரும் பிற்போக்கு கருத்துடையவர்கள்
அல்ல.
very true.
மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் தர ஒப்புக்கொள்வார்களா? அனைவருக்கும் இதன் மூலம் சமத்துவம் கிடைக்குமே.
On what basis.Are you ready for 50% reservation for women or
on the basis of % of population
of each state in central govt.
jobs.Both are examples for proportionate
reservation.Why you want only
on the basis of caste.
Proporionate reservation
violates the principle of equality.
It goes against the fundamental
rights of citizens.
along the line of mr.seemachu, i think aggressive people will be aggressive no matter what. if a system closes one path, aggressive person seek out other path to reach their goals - for e.g. one can use money to buy a seat, or study complementing degrees to get into desired jobs. but this reservation is about opening up (at least) one path to those doesn't have zero paths and this will complement the society as a whole.
KVD
//மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் தர ஒப்புக்கொள்வார்களா? அனைவருக்கும் இதன் மூலம் சமத்துவம் கிடைக்குமே.//
நிச்சயமாக. மக்கள் பிரதிநிதிகளும் மக்கள்தொகை விகிதாசாரத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் மைனாரிட்டி ஆப்பீஸ்மெண்ட் ஒழிந்து உண்மையான அரசாங்கம் நடக்கும்
Mag-post ng isang Komento
<< Home