Font Help?

Huwebes, Enero 26, 2006

1. நெடுநாளைய வாசகன்.

தோழர்களுக்கு வணக்கம்.

  கடந்த மூன்று வருடங்களாய் வெறுமனே வாசகனாய்/பார்வையாளனாய் இருந்த நான் இன்று முதன்முதலில் வெளிவருகின்றேன். அவ்வப்போது பின்னூட்டங்களில் தலைகாட்டியவன் இனிமேல் இந்த பக்கங்களிலும் எழுதலாமென்றிருக்கின்றேன். 
நிற்க...

2003 ஆம் ஆண்டு முதலில் Blogger அறிமுகம் கிடத்ததும் ஓர் ஆங்கில வலைப்பதிவொன்றை துவங்கினேன். ஆனால் அது சாதாரண FWD மின்னஞ்சல்களைச் சேமிக்கும் இடமாக மாறிவிட்டது. பிறகு அதைத் தொலைத்தும் விட்டேன். அதே ஆண்டின் ஜூன் மாதத்தில் பத்ரியின் வலைப்பூ வாயிலாக வலைப்பூக்களின் அறிமுகம் கிடைத்தது. அன்றிலிருந்து இன்றுவரை சாதாரண வாசகனாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். 
எழுதவேண்டும் என்று முடிவெடுக்க இவ்வளவு காலம் எடுத்ததற்கு காரணம் தமிழுக்கும் எனக்குமான எல்லைத் தகறாறுதான். ஆம்!. தமிழில் சாதாரணமாக படித்த போதே அது தன் எல்லைகளையெல்லாம் மீறி என் நேரம் முழுவதையும் இரக்கமில்லாமல் ஆக்கிரமிக்கும். பொன்னியின் செல்வன் நாவலை வெள்ளி இரவு தொடங்கி இடைவெளிவிடாமல் ஞாயிறு அதிகாலை முடித்தேன். அதேபோல் ஊர்வந்து திரும்பும் பயணங்களில் படிக்க வாங்கும் சாண்டில்யன் / இன்னபிற புத்தகங்களை முடிக்க அடுத்த நாள் அலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு எடுத்தது பலமுறை நிகழ்ந்திருகிறது. எனவே சூடுகண்ட பூனைபோல் தமிழில் எழுதுவதை தவிர்த்தே வந்தேன். (ஆமாங்க சாதாரணமா ஏதாவது விவாதம் சூடா போனாலே இங்க இருப்புகொள்ளாது. இதுல நாமளும் ஏதாவது எழுதினா அவ்வளவுதான். யாரு எப்படி பதிலடி கொடுத்திருப்பாங்கன்னே meetingல மோட்டுவலைய பாத்துகிட்டு உக்காரவேண்டியிருக்கும்). ஆனாலும் நம்ம ராசா சபதத்தை கலைத்தது போல் இன்று எழுதகூடதுங்கிற உறுதியை விடுகிறேன்.

வாசிக்கும் இன்பத்திலேயே இருந்த எனக்கு சிலகாலமாய் எழுதவும் ஆசை வந்தது தமிழுக்கு வந்த சோதனைதான்.. என்ன செய்ய. என்ன எழுதினாலும் திசைக்கொன்றாய் திரும்பி நிற்கும் வரிகளை/வார்த்தைகளை இழுத்து ஒருமுகப்படுத்தும் பிரயாசையோடு இந்த பக்கங்களை ஒர் பயிற்சிக்களமாக ஆக்கிகொள்ள விழைகின்றேன்.  எழுத்து எனக்கு தொழில் கிடையாது. என்னால் அடிக்கடி எழுத முடியாவிட்டாலும் அவ்வப்போது எழுதமுயல்கிறேன். எழுதுவது எனக்கு பழக்கமல்ல. மூளையின் நமைச்சலை தீர்க்க ஒரு வழி அவ்வளவே. எனவே இங்கிருக்கும் பெருந்தலைகள் போல எழுதாவிட்டாலும் ஒரு கீழ்மட்ட வாசகனாக எழுத முயற்சிக்கிறேன். அதேபோல் என்னால் அடிக்கடி எழுதமுடியாதென்றாலும் எப்படியும் வாரம் ஒரு பதிவிட முயல்கிறேன்.


  சரிங்க எல்லாத்தையும் இப்பவே பேச வேண்டாம். மொதல்ல மூன்று பதிவு போடனும். அதனால எனக்கு பிடித்த, பிடிக்கும், பிடிக்காத புத்தகங்கள்/எழுத்துக்கள். எல்லாத்தையும் ஒரு சராசரி வாசகனின் அனுபவமாக அடுத்துவரும் பதிவுகளில் எழுதுகிறேன்.[ நன்றி
  என்னை முதன்முதலில் தமிழில் தட்டச்சு செய்ய வைத்த "முரசு" நிறுவனத்தாருக்கும்,
இப்போது பயன்படுத்தும் இ-கலப்பையை உருவாக்கிய "தமிழா" குழுவினருக்கும்,
தமிழ்மணம் வீசிய வலைப்பூக்களுக்கு சிறந்த நந்தவனத்தை அமைத்துத் தந்திருக்கும் "காசி"க்கும்
தமிழை கணிணியில் இலகுவாக பயன்படுத்த நிரல்கள் எழுதி பொதுவில் அர்பணித்த சுரதா மற்றும் இன்னபிற நண்பர்களுக்கும்.]

8 Comments:

Blogger வசந்தன்(Vasanthan) said...

உங்களை முன்பேயே பின்னூட்டங்களில் சந்தித்திருந்தாலும் வலைப்பதிவராய்ச் சந்திப்பதில் மகிழ்ச்சிட
வருக. வருக.

Huw Ene 26, 10:32:00 PM GMT-5  
Blogger சோழநாடன் said...

உங்கள் பின்னூட்டம் தான் எனது பதிவின் முதல் பின்னூட்டம். நன்றி வசந்தன்

Huw Ene 26, 10:43:00 PM GMT-5  
Anonymous Hindi-nagpakilala said...

Next time, while updating ur posts to thamizmanam if you update it through ur toolbar then ur image will get stored in thamizmanam and it will be displayed near ur posts everytime

Huw Ene 26, 11:34:00 PM GMT-5  
Blogger இளவஞ்சி said...

சோழநாடன்,

வாழ்த்துக்கள்...

வருக.. வருக..

Biy Ene 27, 12:19:00 AM GMT-5  
Blogger செல்வராஜ் (R.Selvaraj) said...

சோழநாடன், வருக! வலைப்பதிவில் வாசகராய் மட்டுமன்றி எழுதவும் ஆரம்பித்திருப்பதற்கு வாழ்த்துக்கள். அறிமுகப் பதிவு தான் என்றாலும் நல்ல நடை இருப்பதை உங்கள் எழுத்து காட்டிக் கொடுக்கிறது. நேரம் இருக்கும் போது தொடர்ந்து எழுதுங்கள்.

Biy Ene 27, 12:25:00 AM GMT-5  
Blogger மணியன் said...

வாங்க, வாங்க!
வாழ்த்துக்கள் பல.

Biy Ene 27, 02:36:00 AM GMT-5  
Blogger சோழநாடன் said...

இளவஞ்சி,
வாழ்த்துக்கு நன்றி.. உங்களுக்கு 50 க்கு பிறகு தான் கண்ண கட்டுச்சு. நமக்கு ஆரம்பமே அப்படித்தான் இருக்கு தலை. இருந்தாலும் முடிஞ்சவரை முயன்று பார்ப்போம்.

தகவல் சொன்ன அனாமத்தேய நண்பருக்கு நன்றி.

Biy Ene 27, 03:38:00 AM GMT-5  
Blogger சோழநாடன் said...

செல்வராஜ் உங்கள் பின்னூட்டம் மிகுந்த ஊக்கம் தருகிறது. நன்றி.

மணியன் வாழ்த்துக்கு நன்றி.

Biy Ene 27, 03:39:00 AM GMT-5  

Mag-post ng isang Komento

<< Home