Font Help?

Martes, Pebrero 14, 2006

5. என் கவிதையின் மரணம்

கல்லூரி முடித்து சென்னை வந்த புதிதில் என் வயதொத்த பெரும்பான்மையான தோழர்களிடமிருந்து எதிர்கொள்ளும் பொதுவான கேள்வி பெண் நண்பர்களைப்(girlfriends) பற்றியதாகவே இருக்கும். இல்லையென்ற பதிலுக்கு ஒரு கிண்டலான சிரிப்போ அல்லது வியப்போ தான் பதிலாகக் கிடைக்கும். இதே கேள்வி பற்றி வேலையில் சேர்ந்த பின்பு ஒருமுறை ஒரு தோழியிடம் விவாதிக்கையில் அவளுக்கு கவிதை பிடிக்கும் என்பதால் என் எண்ணங்களை ஒரு கவிதை வடிவில் எழுதிக்காட்டினேன். அந்த கவிதையே கீழே உள்ளது. "ஒரு பொண்ண மடக்கி ஒழுங்கா டாவடிக்க வக்கில்ல இதுல கவிதை வேற சப்போடுக்கு" என்று இன்னொறு இடத்திலிருந்து பாய்ந்து வந்த comment தனிக்கதை.
எல்லாஞ்சரி கவிதையின் மரணம்??? கவிதையை படித்து முடிங்க சொல்கிறேன்.


ப்ரிய சகியே!
எங்கோ இருக்கிறாய்
நீ
ஆயினும் என்
நினைவுகளோடு
மட்டும் நெருக்கமாக!

என்னைப் போல்
கவிதைகள்
உனக்கும்
உயிராயிருக்குமா?

கபடமில்லாப் பேச்சும்,
குழந்தைத்தனமான
மயக்கும் சிரிப்பும்
உன்னிடமிருக்குமா?

நினைத்தே கழிகின்றன
எனது பலப்பல
பொழுதுகள்.

நீ எப்படியிருப்பினும்
எனக்கு பிடித்ததை
உன்னில் ஏற்றி
வெற்று கற்பனைகளில்
களிக்கின்றேன்
நான், தினம்
உன்னோடு.

சாலையோரம் செல்லும்
பள்ளி மாணவியின்
இரட்டை சடை,
பேருந்தில்
முன் அமர்ந்த
பெண்ணின் ஊசலாடும்
கம்மல்கள்,
அழகாய்ச் சிரிக்கும்
தோழியின் சிரிப்பு,
துணிக்கடை பொம்மையின்
நீலநிற சுடிதார்,
அனைத்தையும்
உன்னில் ஏற்றி
அழகுபார்கிறேன்
நான்.

ஏதுமற்ற வெற்று
வட்டத்தினுள்
எல்லா முகங்களையும்
வைத்திருக்கிறாய் நீ.

நீயே
நெஞ்சத்தில்
நிறைந்திருப்பதால்,
அருகிலிருக்கும்
அழகுபெண்கள் கூட
எனைக் கவர்ந்ததில்லை.

நீ எப்படியிருப்பாயென்ற
நினைவோடு
காத்திருக்கும் இந்த
நாட்கள் கூட
நன்றாய்த்தானிருக்கிறது.


எப்படியும் நேரில்
காண காத்திருக்க
வேண்டும் நான்
ஆண்டுக்கணக்கில்
உன்னை என்
தாயும் தந்தையும் (தங்கையும்*)
காணும் வரை.

அதுவரை
எல்லைகளற்ற
அழகுகளோடும்
குணங்களோடும்
என்னில்
வாழ்ந்து கொண்டிரு!


சில வருடங்களுக்கு முன் எழுதிய இந்த கவிதைக்கு சில நாட்களுக்கு முன் தகனகிரியை இனிதே நடந்தது. அரூபமாய் இருந்தவள் முழுவுருவோடு வந்து விட்டாள். இனி வெற்று வட்டத்தினுள் உற்று பார்க்க தேவையில்லை. பனிப்புகையின் நடுவே திக்குதெரியாது துழாவித்திரிய வேண்டியதில்லை. அட வேற ஒண்ணும் இல்லீங்க, "அவுங்களை" வீட்டுல எல்லாம் பாத்துட்டாங்க.(நாம நேரில் பாக்கதான் நாளாகும் போலிருக்கு). இப்போ சொல்லுங்க இது மரித்துப்போன கவிதைதானே. பிரம்மச்சாரி வாழ்கையின் முதலும், இறுதியுமான காதலர்தினத்தை இந்த கவிதையை மெழுகுவர்த்தியாக்கிக் கொண்டாடுகிறேன் :-)))))))))

(*தங்கையை சேர்ககவில்லையென அடிதடி வர சாத்தியமதிகமிருப்பதால் தங்கையுமிங்கே )

6 Comments:

Blogger மணியன் said...

வாழ்த்துக்கள், கவிதைக்கும் கல்யாணத்திற்கும்.

Miy Peb 15, 01:52:00 AM GMT-5  
Blogger Muthu said...

நன்றி மணியன். கல்யாணத்திற்கு இன்னும் நிறைய மாதங்கள் இருக்கிறது. இருப்பினும் உங்கள் வாழ்த்தை இப்போதே ஏற்றுக் கொள்கிறேன்.

Miy Peb 15, 02:48:00 AM GMT-5  
Blogger b said...

கவிதை நன்றாக இருக்கிறது சோழநாடன்.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நண்பரே.

Miy Peb 15, 03:17:00 AM GMT-5  
Blogger Muthu said...

வருகை தந்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மூர்த்தி

Miy Peb 15, 04:15:00 AM GMT-5  
Blogger முத்துகுமரன் said...

நீங்கள் வெட்கத்தை கேட்ட போது
அவர்கள் என்ன தந்தார்கள்......

மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே.....

Miy Peb 15, 04:37:00 AM GMT-5  
Blogger Muthu said...

முத்துகுமரன்:-)))))

இன்னும் ஏதும் வரவில்லை. :-)

Miy Peb 15, 04:41:00 AM GMT-5  

Mag-post ng isang Komento

<< Home